Saturday, June 23, 2012தண்டையார்பேட்டை ::இந்திய மீனவ சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் தயாளன் தலைமையில் நேற்று காசிமேட்டில் நடந்தது. சங்க நிர்வாகிகள் வடிவேல், பாபு, செல்லப்பன், குமார், அம்முலு உள்பட பலர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் அக்கரை பேட்டையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததும், தமிழக முதல்வர் தலையிட்டு அவர்களை விடுவிக்க முயற்சி எடுத்ததற்கு நன்றி. சியோ மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை 20 ஆண்டுகளுக¢கு சிறையில் தள்ள வேண்டும் என்று பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மீனவர் சங்கம் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment