Saturday, June 23, 2012

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 150 இலங்கையர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது!

Saturday, June 23, 2012
சென்னை::தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 150 இலங்கையர்களைக் காணவில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக இவ்வாறு இலங்கை அகதிகள் காணாமல் போயுள்ளனர்.

இந்த அகதிகள் மற்றுமொரு படகுப் பயணத்தை நோக்கி ஆயத்தமாகியிருக்கக் கூடுமெனஅச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போன இலங்கை அகதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாககேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரள கரையோரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு செல்வதனை தடுக்க பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை அகதிகள் கேரள விடுதிகள், ஹோட்டல்களில் குழுக்களாகதங்கியிருக்கின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு புகலிடக் கோரிக்கையாளர் படகு இந்தியாவை விட்டு புறப்பட்டுச்சென்றுள்ளதா இல்லையா என்பதனை உறுதிப்படத் தெரிவிக்க முடியவில்லை என குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment