Friday, June 29, 2012

ஐ.மு. கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வேட்பு மனு தாக்கல்!

Friday, June, 29, 2012
புதுடெல்லி::ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி, இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி தேர்தல், அடுத்த மாதம் 19&ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ. மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் சங்மா போட்டியி டுகிறார். தேர்தலில் போட்டியிடுவதால் மத்திய நிதியமைச்சர் பதவியை நேற்று முன்தினம் பிரணாப் ராஜினாமா செய்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவில் அவரை முன்மொழிந்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலை வர் கருணாநிதி, ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் 480 பேர் கையெழுத்திட்டுள்ளனர். பிரணாப் சார்பாக மொத்தம் 4 செட் வேட்பு மனுக்கள் தயார் செய்யப்பட்டன. வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக இன்று காலை 11 மணிக்கு பிரணாப் முகர்ஜி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா மற் றும் மத்திய அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜ்யசபா செயலாளர் விவேக் குமாரி டம் வேட்பு மனுவை பிரணாப் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்...

ஐ.மு. கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் நாளை சென்னை வருகை!

சென்னை::ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐ.மு. கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, ஆதரவு திரட்டுவதற்காக நாளை தமிழகம் வருகிறார். அவருக்கு திமுக, காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழக எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து பிரணாப் வாக்கு சேகரிக்கிறார். பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24&ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 19&ம் தேதி நடக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ., அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகிறார். பிரணாப், சங்மா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்தார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா முன்னிலையில் தனது வேட்பு மனுவை பிரணாப் நேற்று தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, பிரதமர், சோனியா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்மொழிந்திருந்தனர். அதேபோல, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி முன்னிலையில் சங்மாவும் நேற்றே வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டுகிறார். இதன் முதல்கட்டமாக நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு சென்னை வரும் பிரணாப் முகர்ஜிக்கு விமான நிலையத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இரு கட்சிகளும் செய்து வருகின்றன. பிரணாப்பை வரவேற்று விமான நிலையம் முதல் அண்ணா சாலை வரை பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு காரில் கோபாலபுரம் செல்லும் பிரணாப், அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். அப்போது, தனக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்ததற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கிறார். அதைத் தொடர்ந்து அடையாறு பார்க் ஓட்டலில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் பிரணாப் கலந்து கொண்டு, திமுக எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பிரணாப் செல்கிறார். அங்கும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. சத்தியமூர்த்தி பவனில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்களையும் சந்தித்து வாக்கு கேட்கிறார். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்களை தனியாக சந்தித்து பேசவும் பிரணாப் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கான இடமும், நேரமும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் ஆந்திரா செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்களை சந்திக்கிறார். சங்மா பிரசாரம் பிரணாப்பை எதிர்த்து போட்டிடும் சங்மா, தனது சொந்த மாநிலமான மேகாலயாவில் உள்ள துரா பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சித் தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்களை சந்திக்கவும் சங்மா திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment