Tuesday, June 12, 2012

தமது நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் குறித்து தமக்கு பொறுப்பு இல்லை எனின் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அறிவிக்க வேண்டும் ஜாதிக ஹெல உ.!

Tuesday, June, 12, 2012
இலங்கை:: தமது நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் குறித்து தமக்கு பொறுப்பு இல்லை எனின், அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அறிவிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

இதனைத் தொடர்ந்து அவர் நாடு திரும்பி இருந்தார்.

இதனை அடுத்தே ஜாதிக ஹெல உறுமய இந்த அறிக்கையை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இந்திய மற்றும் தமிழக அரசாங்கங்களை குற்றம் சுமத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவர்கள் தமது பொறுப்பினை சரியாக செய்ததாக அமைச்சர் ரெஜினோல்ட் குரே நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment