Tuesday, June 12, 2012

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களில் எண்ணிக்கையில் உயர்வு - மஹிந்த ஹத்துருசிங்க!

Tuesday, June, 12, 2012
இலங்கை::யாழ்ப்பாண குடாநாட்டில் குற்றச் செயல்களில் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவத்தின் எண்ணிக்கை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 40 வீதமான படையினர் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக்குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்யவில்லை என்பதனை பிரதேசமக்கள் நன்கு அறிவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக யாழ்ப்பாண பொதுமக்கள் இராணுவப் படையினருக்கு நன்றி பாராட்டிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படையினர் கிரமமான முறையில்அகற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக வெளியானதகவல்கள் பற்றி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் காமினி டிசில்வா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

காவல்துறையினர் எந்த சந்தர்ப்பத்திலும் தமது கடமைகளிலிருந்து தவறவில்லை எனகாவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், படையினர் நாட்டுக்காக ஆற்றிய சேவைகளை இலகுவில் மறந்து விடமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment