Tuesday, June 12, 2012

ஏர்வாடியிலிருந்து இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப திட்டம் : புரோக்கரிடம் கியூ பிரிவு விசாரணை!

Tuesday, June, 12, 2012
கீழக்கரை::இலங்கை அகதிகளை, ஏர்வாடி கடற்கரையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகில் அனுப்ப, திட்டம் தீட்டிய புரோக்கரிடம், கியூ பிரிவு போலீசார், விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, சிக்கல் பகுதிகளில், கடந்த சில நாட்களாக, இலங்கை தமிழர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இவர்கள், பக்தர்கள் என்ற போர்வையில், ஏர்வாடி தர்கா வளாகத்தில் தங்கி வந்ததை, கியூ பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.
இங்குள்ள ஏழை மீனவர்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களிடமுள்ள மீன்பிடிப் படகை, கூடுதல் விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்தது. படகை கேரளா கொண்டு சென்று, அங்கு புதிய வர்ணம் பூசி, அதில், அகதிகளை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல, திட்டம் தீட்டினர். ஏர்வாடி அருகே, செங்கல் நீரோடையை சேர்ந்த ரமேஷ்,42, புரோக்கராக செயல்படுவதாகவும், ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல, 14 பேரிடம், தலா ஒரு லட்ச ரூபாய் வாங்கியதாகவும் தெரிய வந்தது. நேற்று முன்தினம், ரமேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த, கடுக்காய் வலசை மனோகரன், ஆகியோரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment