Tuesday, June 12, 2012

இலங்கை விஜயம் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை – ஐ.நா.!

Tuesday, June, 12, 2012
இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் 18வது கூட்டத்தின் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்துவது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான போர் குற்றங்கள் சம்பந்தமான மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட யோசனையில், போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த, மனித உரிமை ஆணைக்குழு உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளை விசாரணைகளுக்கு அடிப்படையாக கொள்ள வேண்டும் எனவும் இந்தியாவின் ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்த அந்த யோசனையில் கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் இலங்கை செல்ல அனுமதி கோரியிருந்தது.

எனினும் இலங்கைக்குள் செல்ல, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் ரூபட் கொல்வில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment