Sunday, June, 17, 2012இலங்கை::கியூபாவுக்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேச்சு நடத்துகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹவானாவில் உள்ள ஒசே மர்டி வானூர்தி தளத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றடைந்தார். அதன்போது, அவரை கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அங்குள்ள இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது, கியூபா ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரை யாடல்கள் இடம்பெறவுள்ளன. அதேவேளை, சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப் படவுள்ளன. கியூபாவில் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் பலவற்றையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்காணிக்கவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கியூப விஜயத்துக்கான நோக்கம் இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவதும் சர்வதேச மட்டத்தில் கியூபாவின் இலங்கைக்கான ஒத்துழைப்புக்காக கியூபா அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதும் ஆகும். இருநாடுகளும் சுகாதாரம், விளையாட்டு, தொழில்நுட்ப விடயங்களில் அனுசரணைகளை இந்த விஜயத்தின்போது பரிமாறிக்கொள்ள விருக்கின்றன. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கியூபாவில் பல பொருளாதார அபிவிருத்தி திட்டங் களைப் பார்வையிடவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இலங்கையின் விவசாயத் துறையில் உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இவ்விஜயத்தின் போது ஆராயப்படவுள்ளது. கியூபாவின் உயிரியல் தொழில்நுட்ப நிலையத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
No comments:
Post a Comment