Sunday, June, 17, 2012சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக, கனேடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
அண்மையில் கனடா செல்லவிருந்த நிலையில், பெனினில் இருந்து இலங்கைக்கு 148 அகதிகள் நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்கள் எந்த இடத்தில் இருந்து கனடாவுக்கான பயணத்தை ஆரம்பித்தாலும், அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment