Sunday, June 17, 2012

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்: இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்!

Sunday, June, 17, 2012
லாகாபோஸ்::ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள லா காபோஸ் நகரில், ஜி-20 மாநாடு விரைவில் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். அப்போது இலங்கை ஜனாதிபதியையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க இருக்கிறார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து தலைவர்களையும் மன்மோகன் சிங் சந்திக்கும் நிகழ்ச்சி நிரலில் இலங்கை ஜனாதிபதியின் பெயரும் இடம்பெற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதன் பினன்ர் இருநாட்டு தலைவர்களிடையேயான முதலாவது சந்திப்பு என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment