Sunday, June, 17, 2012இலங்கை::மட்டக்களப்பு வழைச்சேனை பொலிஸ் பிரிவின் நாசவந்தீவு கரையோரத்தில் நான்கு டைனமைட் குச்சிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலடி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரால் ஒருவரால் நேற்று பிற்பகல் சந்தேகநபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக இன்றைய தினம் வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...
ஹொரவபத்தானை, வாஹல்கட பிரதேசத்தில் புதையல் தோண்டிய 14பேரை கைது!
ஹொரவபத்தானை, வாஹல்கட பிரதேசத்தில் புதையல் தோண்டிய 14பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்...
No comments:
Post a Comment