Monday, June, 04, 2012இலங்கை::அமெரிக்கா, இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே அமெரிக்கா பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பூவியியல் அமைவிடம் மற்றும் வளங்கள் போன்றவற்றினால் அமெரிக்கா இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்புடன் அமெரிக்கா இணைந்து கொண்டு நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் அமெரிக்காவின் மறைமுக நோக்கம் புலப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை விதைக்கும் நோக்கிலேயே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தரப்புக்கள் வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமா கோரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment