Monday, June 4, 2012

கொழும்பில் கொல்லப்பட்டவர் புலிகள் இயகத்தின் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலர் என அடையாளம் காணப்பட்டார்!

Monday, June, 04, 2012
இலங்கை::கொழும்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி தேசிய பாடசாலை ஒன்றின் முன்பாக கொலை செய்யப்பட்டு அனாதரவாக விடப்பட்ட சடலம் பின்னர் அவரது தந்தையாரால் நேற்று அடையாளம் காட்ட்டப்பட்டுள்ளது.

இவர் மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக பணியாற்றியவர். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகத் தொழிற்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment