Sunday, June 3, 2012

சுண்டிக்குளத்தில் குண்டு வெடித்ததில் சிறுவன் காயம்!

Sunday 3rd of June 2012
இலங்கை::முல்லைத்தீவு பகுதியில் குண்டொன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.

சுண்டிக்குளம் களப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவனின் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, களப்பு பகுதியில் கரையொதுங்கிய குண்டொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கிறார்...

14 வயதுடைய மாணவனொருவன் தனது வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள, சாலை வாவியில் நண்டு பிடித்துக் கொண்டிருந்தபோது மர்மப் பொருளொன்று வெடித்ததால் அவனது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

இதேவேளை, மழை பெய்ததன் காரணமாக புதையுண்டிருந்த வெடிபொருள் வெளியே வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment