Thursday, June 14, 2012

ஆஸ்திரேலியா அனுப்புவதாக இலங்கை தமிழர்களை ஏமாற்றிய புரோக்கர்கள் கைது!

Thursday,June,14,2012
கீழக்கரை::இலங்கைத் தமிழர்களை, ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாகக் கூறி, 9.60 லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றிய இரு புரோக்கர்களை, கீழக்கரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கீழக்கரை அருகே, செங்கல்நீரோடை ரமேஷ்,41. இவரின் நண்பர்கள் கடுக்காய் வலசை மனோகரன்,41. சென்னை ரஜூவன் ஆகியோர், செங்கல்பட்டு அழகேசன் நகரைச் சேர்ந்த பாஸ்கரன்,37, என்பவரை சந்தித்தனர். ஆஸ்திரேலியாவிற்கு விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கும்படியும் கூறினர்.

மிரட்டல் : இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த மூன்று பேருக்கு, ஆஸ்திரேலியா செல்ல விசா ஏற்பாடு செய்யும்படி கூறி, முன்பணமாக பாஸ்கரன், 1.30 லட்ச ரூபாய் கொடுத்தார். சென்னை ஜெயக்குமார், ஒன்பது பேருக்காக, 8.30 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்தார். பல நாட்களாகியும், ஆஸ்திரேலியா செல்ல விசா ஏற்பாடு செய்யவில்லை. இதற்கிடையே சுற்றுலா வந்த இலங்கைத் தமிழர்கள், விசா காலம் முடிந்ததால், இலங்கை திரும்பிச் சென்றனர். பணத்தை திருப்பிக் கேட்ட பாஸ்கரனுக்கு, ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்தார். பாஸ்கரன் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, ரமேஷ், மனோகரன் ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான ரஜூவனை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment