Thursday,June,14,2012பெங்களூர்::கர்நாடக போலீசால் தேடப்பட்டு வந்த பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தா நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான மக்கள் ஆத்தி ரத்துடன் அவரை தாக்க பாய்ந்ததால், போலீசார் பத்திரமாக அவரை அழைத்து சென்றனர்.
அமெரிக்க பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து கர்நாடகாவில் நித்யானந்தாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஏற்கனவே இரன்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற் படுத்திய வழக்கு சம்பந்த மாக கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தா, மதுரை ஆதீனத்துக்கு குடியேறி அங்கும் சர்ச்சையை கிளப் பினார்.
இந்த நிலையில் பாலியல் புகாரும் சேர்ந்து கொண்டதால் அவருக்கு எதிரான போராட்டம் வலுவடைந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலை யும் நிலை உருவானதால், நித்யானந்தாவுக்கு வழங் கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்து அவரை மீண்டும் கைது செய்யவும், ஆசிரமத்தை மூடி சீல் வைக்கவும் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உத்தரவு பிறப்பித்தார்.
முதல்வர் உத்தரவுப்படி, ஆசிரமத்தில் நேற்று இரண்டாவது நாளாக சோதனை நடந்தது. முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள், சி.டி உள்பட பல பொருட் களை கைப்பற்றினர். ஆசிரமத்தில் நான்கு கன்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை பூட்டப்பட்டுள்ளன. சாவி மற்றும் விவரம் குறித்து ஆசிரம நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. அவற்றை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று மாலை திடீரென்று ராம்நகரம் ஜேஎம்எப்சி நீதிமன்றத்தில் நீதிபதி கோமளா முன் நித்யானந்தா ஆஜரானார். ஜாமீன் கோரி மனு செய்தார். நாளை வருமாறு நீதிபதி கூறியதால் நித்யானந்தா வெளியேறினார். அவர் காரில் ஏறி செல்வதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்க பாய்ந்தனர். கடும் முயற்சிக்கு பின் அவரை மீட்டு காரில் ஏற்றி பறந்தது போலீஸ். இதுகுறித்து ராம்நகர் மாவட்ட எஸ்பி அனுபம் அகர்வால் கூறுகையில், ‘நித்யானந்தா நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்’ என்றார்.
No comments:
Post a Comment