Thursday, June 14, 2012

மடுவில் பிரதேசத்தில் பொதுமக்களுக்கான மருத்துவ முகாம்!

Thursday,June,14,2012
இலங்கை::மடுவில் பிரதேசத்தில், பல்வேறுபட்ட காரணங்களால் தேவையான மருத்துவ சிகிச்சையை பெற்றிராதவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை மற்றும் நோய் தொடர்பான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக 52ஆவது படைப்பிரிவினரால் மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மடுவில் சந்திரமவ்லிசா பாடசாலையில், 7ஆவது விஜயபாகு காலாட்படையின் கட்டளைத்தளபதி லெப்டினன் கேனல் டபில்யூஎம்எம்கேடீ பண்டாரவின் தலைமையில் அவரது படையினரால் இம் முகாமுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதில் யாழ் போதனா வைத்தியசாலையின் இரு வைத்தியர்களும், மந்திக்கை வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியரொருவரும் பங்கேற்றிருந்ததுடன், இதில் 300க்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

52ஆவது படைப்பிரிவின் பொதுக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அனுரா சுதாசிங்க, இம் முகாமை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கும் முகமாக மடுவில் பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

செஞ்சிலுவை சங்கத்தின் குருணாகல் கிளையுடன் இணைந்து இம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment