Friday, June, 08, 2012இலங்கை::கடந்த வருடம் மருத்துவப்பீடத்திற்கு வடக்கில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டதாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்திற்கான விவசாயப்பீடம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் தேசியக் கொடியை ஏந்தி, மேதினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.சம்பந்தன், அதற்கு முன்னர், தேசியக் கொடிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் எனவும் அவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வந்த அவர், தமது பிள்ளைகள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை கற்பதற்காக தெற்கில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசாங்கம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்தியை மாத்திரமல்ல, அரசியல் தீர்வையும் வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பட்டுள்ளார்...
யாழ் மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அத்துமீறிய குடியமர்வுகள் அரச காணி விபரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
யாழ் மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அத்துமீறிய குடியமர்வுகள் மற்றும் அரச காணிகள் தனியாரது வெற்றுக் காணிகள் தொடர்பில் ஆராயும் விஷேட கூட்டமொன்று இன்றைய தினம் மாலை (08) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தற்போதைய அத்துமீறிய குடியமர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் இவ் விடயம் தொடர்பில் உரிய ஆவணங்களை சேகரிக்கும்படி அமைச்சர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் அரச மற்றும் தனியாரது வெற்றுக் காணிகள் தொடர்பிலான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டதன் பின்னர் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் யாழ் பிரதேச செயலர் மாநகர முதல்வர் ஆணையாளர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை கிராம சேவையாளர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் காணி அதிகாரிகள் சுற்றாடல் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment