Friday, June 8, 2012

இலங்கை தமிழர் சாவு தடுக்கநடவடிக்கை எடுக்கவில்லையா? தா.பாண்டியனுக்கு கருணாநிதி கண்டனம்!

Friday, June, 08, 2012
சென்னை::இலங்கை தமிழர் சாவு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தா.பாண்டியன் கூறியதற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்து விளக்கமான பதில் அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் சாவை தடுக்காமல் சமாதிக்கு பூவைக்க நினைக்கிறார் கருணாநிதி, தா.பாண்டியன் குற்றச்சாட்டு இது 7,6,2012 தேதி ஜனசக்தி நாளிதழின் பேனர் செய்தியாகும். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தான் “தா''பாண்டி யன் நம்மீது பழி சுமத்தியிருக்கிறார்.

திருவாரூர் சென்ற தா.பாண்டியன் தேவையில்லாமல் என்னைப் பற்றி ஈழத் தமிழர் சாவைத் தடுக்காமல் சமாதிக்கு பூ வைக்க கருணாநிதி நினைப்பதாக ஏன் பேட்டி அளிக்க வேண்டும்? உண்மையிலேயே இலங்கை தமிழர் சாவைத் தடுக்க நாம் முயற்சிக்கவில்லையா?

* 14,10,2008ல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன் வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனை வரும் பதவி விலகிட நேரிடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையா?
* பிரதமர், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்திடும் என்று பாலுவிடம் உறுதி கூறவில்லையா?
* பிரதமர் அளித்த பேட்டியிலும், இப்பிரச்சினைக்கு ராணுவம் மூலம் தீர்வு என்பது சரியாக அமையாது. இலங்கையின் இறையாண்மையையும், அங்கு வசிக்கும் தமிழர்களின் மனித உரிமையையும் மதிக்கும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை இனப் பிரச்சி னைக்கு தீர்வு காண முழு ஈடுபாட்டுடன் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று கூறவில்லையா?
* 12,11,2008ல் இலங் கைத் தமிழர்களுக்காக தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட வில்லையா?
* 4,12,2008ல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவில்லையா?
* 31,3,2009ல் சோனியா காந்தி எனக்கு எழுதிய நீண்ட பதில் கடிதத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர முடியும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்களே அதெல் லாம் உண்மை இல்லையா?
* 7,4,2009ல் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில் இலங்கையில் ஒட்டு மொத்த தமிழின மக்கள் கூண்டோடு அழிக்கப்படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேனே, தா. பாண்டியன் அதை அறிய மாட்டாரா?
* மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி 23,4,2009ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு அறிக்கை விடுத்தேன். அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
24,4,2009 இரவு அண்ணா அறிவாலயத்திற்கு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வந்து, என்னைச் சந்தித்து விவரங்களையெல்லாம் விளக்கினார்.
தேவையில்லாமல் திமுக மீது தா. பாண்டியன் குறை சொல்வதை இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும். விரிக்கிற் பெருகும்... விரிவஞ்சி விடுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

No comments:

Post a Comment