Friday, June 8, 2012

புலி உறுப்பினர்களை புனருத்தாரனம் செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது!

Friday, June, 08, 2012
இலங்கை::புலி உறுப்பினர்களை புனருத்தாரனம் செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இந்த புனருத்தாரன திட்டத்திற்கு அமைய இதுவரையில் சுமார் 11 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் தமது குடும்பத்துடன் இணைந்துள்ளனர்.

இது தவிர அவர்கள் சுயதொழிலை மேற்கொள்ளும் நோக்கில் கடன் வசதியினை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே இந்த கடன் திட்டத்திற்காக 30 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆக கூடிய கடன் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெறமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடனுக்காக 4 சதவீத வட்டி மாத்திரமே அறவிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment