Saturday, June, 09, 2012புதுச்சேரி::கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
புதுவையில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் அவர் இன்று கலந்துரையாடினார்.
அப்போது மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின்நிலையத்தில் 2 மீட்டர் உயரத்தில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் சுனாமியின்போது ஜெனரேட்டர்கள் பாதிக்கப்பட்டு மின்சாரம் தடைபட்டதால் அங்கு விபத்து ஏற்பட்டது. ஆனால் கூடங்குளத்தில 15 மீட்டர் உயரத்தில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சுனாமியின்போது 9.5 மீட்டர் அளவுக்குத்தான் அலை எழும்பியது. எனவே கூடங்குளத்தில் ஜெனரேட்டர்கள் பாதிப்படைய வாய்ப்பில்லை. கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு குறித்து யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment