Monday, June 4, 2012

இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் ஆர்வம் - ஜீ.எல்.பீரிஸ்!

Monday, June, 04, 2012
இலங்கை::இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷன்கிரி லா பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள், இலங்கையின் தந்திரோபாயங்கள் தொடர்பில் ஆர்வம் காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோபாய ராஜபக்ஷ, முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத ஒழிப்பு, சட்டவிரோத ஆட்கடத்தல் தவிர்ப்பு போன்ற விடயங்களில் இலங்கைப் பாதுகாப்பு தரப்பின் தந்திரோபாயங்கள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் உலகின் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரின் அனுபவங்களை உலகின் பல நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment