Monday, June, 04, 2012இலங்கை::இலங்கைக் காவல்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காவல் நிலையங்களில் சந்தேக நபர்கள் துன்புறுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை காவல் நிலையங்களில் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஊடகங்களும் பொது மக்களும் தவறான ஓர் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமறைவான சந்தேக நபர்களை கைது செய்யும் போதும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் காவல்துறையினர் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இதனை சித்திரவதைச் சம்பவங்களாக ஒருபோதும் கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுவது ஆரோக்கியமானது என காவல்துறை உடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment