Monday, June 4, 2012

துபாயில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட சில இலங்கையர்கள் கைது!

Monday, June, 04, 2012
துபாயில் வீடுகளுக்குள் நுழைந்து நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் போன்ற பெறுமதியான பொருட்களை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களுல் இரண்டு பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் குழுவினரால் திருடப்பட்ட பொருட்களில் சில இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேறுவதற்காக போலி விமானச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment