Monday, June 4, 2012

கேரளாவில் இலங்கை அகதிகள் 150 பேர் கைது!

Monday, June, 04, 2012
கொல்லம்::சுமார் 150யிற்கும் அதிகமான இலங்கை அகதிகள் கேரள மாநில கொல்லம் கரையோரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 19 பெண்களும் 22 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுறது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக இவர்கள் இந்திய பணப்பெறுமதியில் ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை முகவர் ஒருவருக்கு செலுத்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

படகை செலுத்திய நபருடன் குறிப்பிட்ட முகவர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment