Monday, June, 04, 2012இலங்கை::யாழ்ப்பாணம் - நைனாதீவு 8ம் வட்டாரப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவம் இன்று காலை 08.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்த போது அது வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.
அதன் பின்னர் யாழ். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment