Tuesday, June 26, 2012
இலங்கை::புலி வேடம் போட்டு புலிகளின் முதலீடுகளில் வாழும் புலி பினாமிகளின் தமிழ் தேசியக் புலிகூட்டமைப்பின் ஒருங்கினைப்பு குழு!!
வடக்கு,கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாகத் தெரிவித்தும் அவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது.
எமது இடங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம்'என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், எங்களுடைய வீட்டுக்குச் செல்ல விடு, வெளியெறு வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது?, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே ஆடாதே, இராணுவ ஆக்கிரமிப்பு நிலைக்காது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றனர்.
இதன்போது ஏராளமான பொலிஸார் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை முறிகண்டிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் கடந்த சில தினங்களாக திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்க வைக்கப்ட்டிருந்த நிலையில் இம் மக்களை மீண்டும் இராணுவத்தினர் நேற்று இரவு வாகனங்களில் ஏற்றி மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக இன்று ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறு பதற்ற நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், சிறிதரன், சரவணபவன், சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசன், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக செயலாளருமான பாஸ்கரா, இடதுசாரிக் கட்சி பிரதிநிதி சிறிதுங்க ஜெயசூரிய, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வவுனியா நகர சபையின் உபதலைவர் எம்.எம். ரதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்...
அடுத்த கட்டமாக மன்னார் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக (புலி)கூட்டமைப்பின் ஒருங்கினைப்பு குழுதகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:
Post a Comment