Wednesday, June 27, 2012

நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்த சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை!

Wednesday,June 27, 2012
இலங்கை::நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.

இலங்கை தண்டனை சட்டக்கோவை 185 பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட யாழ். நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி சிவாஜிலிங்கத்துக்கு மன்றுக்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றக் கட்டளையை கிழித்தெறிந்து, நீதிமன்ற கட்டளையை மதிக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவரது செயற்பாடும் கருத்தும் நீதிமன்றத்தை அவமதிக்கும் விவத்தில் அமைந்துள்ளது என்று தெரிவித்தே யாழ் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment