
Sunday, June, 24, 2012புதுடெல்லி::பதவி உயர்வு, போயிங் 787 பயிற்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா பைலட்கள் கடந்த மாதம் 7ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கினர். இண்டியன் பைலட் ஸ்கில்ட் சங்கத்தை சேர்ந்த 444 பைலட்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த 101 பைலட்களை ஏர் இந்தியா நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இண்டியன் பைலட் ஸ்கில்ட் சங்கத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. அதன் தலைவர்கள் 11 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. பைலட் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 48 நாளாக பைலட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணி நீக்கம் செய்யப்பட்ட பைலட்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரியும் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட பைலட்கள் முடிவு செய்தனர். முதல்கட்டமாக 10 பைலட்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள் என அறிவித்தனர். அதன்படி டெல்லி ஜந்தர் மந்தரில் பைலட்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்களோடு குடும்பத்தினரும் பங்கேற்றனர். மும்பை ஆசாத் மைதானத்திலும் பைலட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பைலட்கள் போராட்டத்தால் ஏர்இந்தியாவுக்கு இதுவரை ரூ.520 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment