Thursday, June 21, 2012

சர்வதேச விளையாட்டு பயிற்சிகளை பெறும் முன்னாள்புலி உறுப்பினர்கள்!

Thursday, June, 21, 2012
இலங்கை::புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் விளையாட்டுத்திறன்களை வெளிக்கொண்டுவரும் முகமாக, விளையாட்டுதுறை அமைச்சு, சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சு, புனர்வாழ்வு ஆணையாளர் நாகயம் பணிமனை ஆகியன இணைந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று(ஜூன்-19) சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

விளையாட்டுத்துறையில் திறமையுள்ள இவ் இளைஞர்களுக்கென நிபுணத்துவம்பெற்ற பயிற்சியாளர்களால், கட்டமைக்கப்பட்ட விளையாட்டு பயிற்சி திட்டம் நடாத்தப்படவுள்ளது. இவர்களது விளையாட்டு சார் திறன்களை மேலும் வலுவூட்டுவதற்கென இந் நிகழ்ச்சித்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கரப்பந்து, காற்பந்து, கிரிகெட், நீச்சர், கராதே, துப்பாக்கிச் சூடு, பாரம் தூக்குதல் மற்றும் பல விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படவுள்ளன.

முழுமையான தகைமைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு பயிற்சியாளர்களால், இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தப்பட்டு பயற்சிகள் வழங்கப்டவுள்ளன.

இவ் இளைஞர்கள் தமது தாய்நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட காலம் முழுமையாக முடிவடைந்துள்ளடன், இவர்களது எதிர்காலம் தற்போது சுபீட்சம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

இவ் இளைஞர்கள், சமாதானத்தை நாட்டில் நிலைக்கச்செய்து, பிரிவினைவாதத்தை இல்லாதொழித்தமைக்கு தமது நன்றிகளை அரசாங்கத்திற்கு தெரிவித்துடன், தமது திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்கு வாய்பு வழங்கியமைக்கும் மன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

இத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹின்தானந்த அழுத்கமகே, சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்தசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஸன ஹெட்டியாராட்சி மற்றும் பல அதிகாரிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment