Thursday, June 21, 2012

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில், தமிழ் மொழிப்பயிற்சியை நிறைவு செய்த 92 பொலிசாரின் பயிற்சி நிறைவு!

Thursday, June, 21, 2012
இலங்கை::மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில், தமிழ் மொழிப்பயிற்சியை நிறைவு செய்த 92 பொலிசாரின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று காலை கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில், பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.ஏ.சார்ள்ஸ், மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.சமரகோன், மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி லெப்.கேணல் சுதத்த திலகரட்ண உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஆசியா பவுண்டேசனின் நிதியுதவியில் நடைபெற்றுவருமம் இப் பயிற்சி நெறியின் நான்காவது தொகுதி பயிற்சியைப் பெற்றவர்களே நேற்று வெளியாகினர்.

இந் நிகழ்வில், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடன நிகழ்வு, நாடக நிகழ்வுகளும் நடைபெற்றன.

No comments:

Post a Comment