Wednesday,June,20, 2012புதுடெல்லி::இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்ஷங்கர் மேனன் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததன் பின்னர் இடம்பெறும் விஜயமாக இது அமைந்துள்ளது என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை பிரேசிலில் நடைபெறும் ரியோ மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கும், இந்திய பாதுகாப்பு செயலாளரின் இலங்கை விஜயத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென இந்திய அதிகாரிகள் ஹிந்து ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகரான சிவ்ஷங்கர் மேனன் இறுதியாக கடந்த வருடம் ஜூலை மாதம் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment