Wednesday, June 20, 2012

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தோழர் பத்மநாபாவின் 22வது நினைவுதினம் வெகுசிறப்பாக நடைபெற்றது!

Wednesday, 20th of June 2012
இலங்கை::Eprlf செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 22வது நினைவு தினம் இன்று மாலை நேற்று (19) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

1990ம் ஆண்டு யூன் மாதம் 19ம் திகதி சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் புலிகள் இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அத்துயரச் சம்பவத்தின் 22வது நினைவுதினம் தோழர் நக்கீரன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தை ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையைத் தொடர்ந்து பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரட்ணம் சட்டத்தரணி தேவராஜன் ரங்கன் பிரபல ஊடகவியலாளர் நெல்சன் எதிரிசிங்க சிந்தன் டி சில்வா கே.சுப்பையா ஐ.சிறி ரங்கேஸ்வரன் ஆகிய தோழர்கள் உரைநிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் தோழர்கள் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment