Monday, June 18, 2012

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இருப்பிடங்களை விட்டுச்சென்றவர்களின் உடைமைகளை கையளிக்க நடவடிக்கை!

Monday, June 18, 2012
இலங்கை::யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இருப்பிடங்களை விட்டுச்சென்றவர்களின் கடைகள் சிலவற்றையும் மீள் குடியேற்றத்திற்கான காணிகளையும் அடுத்த வாரமளவில் உரிமையாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராநபக்ங தலைமையில் மீள்குடியேற்றத்திற்கான காணிகளும் கடைகளும் மீள ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கிளிநொச்சி நகரில் 22 கடைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் திருமுறிகண்டி பிரதேசத்தில் 147 குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கான காணிகளும் வழங்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து இராணுவத்தினர் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக நிலைகொண்டிருந்தனர்.

எனினும் தற்போது நிலவுகின்ற அமைதியான சூழ்நிலையின் கீழ் கட்டம் கட்டமாக மக்களின் உடைமைகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment