Monday, June 18, 2012

வடக்கிலுள்ள பொது மக்களில் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்க வேண்டிய எந்த ஒரு தேவைகளும் இராணுவத்திற்கு இல்லை - மஹிந்த ஹதுருசிங்க!

Monday, June 18, 2012
இலங்கை::வடக்கில் இராணுவத்தின் பொறுப்பிலிருந்த 50 வீதமான வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் விரைவில் கையளிக்கவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

வடக்கிலுள்ள பொது மக்களில் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்க வேண்டிய எந்த ஒரு தேவைகளும் இராணுவத்திற்கு இல்லை என்று தெரிவித்த அவர், அவ்வாறு கூறப்படும் செய்திகள் தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் முகாம்களை அமைப்பதற்கு தேவையான காணிகளை மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, உரிய இடத்தில் பொருத்தமான காணிகள் கிடைத்தவுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கின் பாதுகாப்பு தேவைகளை கருத்திற் கொண்டு 1995 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் நிலை கொண்டுள்ளனர். அப்போது தேவைகளை கருத்திற்கொண்டு பொறுப்பேற்ற வீடு களில் 50 வீதமான வீடுகள் கொடுக் கப்பட்டுள்ளன.

அதேபோன்று தற்போது 400 வீடுகளிலேயே இராணுவத்தினர் இருக்கின்றனர். இந்த வீடுகளுக்கான மாதாந்த கொடுப் பனவு உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று வடக்கின் பாதுகாப்பு நிலைமை கொழும்பு உட்பட நகர்ப் புரங்களைவிட சிறந்ததாக காணப்படுவதுடன் 26 ஆயிரம் இராணுவத்தினர் கடமையாற்றி வந்த நிலையில் அது தற்போது 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு தேவைகளை கருத்திற்கொண்டு தேவைக்கேற்ப படிப் படியாக எஞ்சியுள்ளவர்களை குறைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment