Tuesday, June, 19, 2012இலங்கை::ஹம்பாந்தோட்டை, கட்டுவன பகுதியில், மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் தங்காலை மேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
ஜூலம்பிட்டிய அமரே என அழைக்கப்படும் கிகன கமகே அமரசிறி எனும் சந்தேகநபர் சற்று நேரத்துக்கு முன்னர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment