Tuesday, June 19, 2012

மெக்சிகோ ஜி-20 மாநாட்டில் மன்மோகன் சிங்-மகிந்தா ராஜபக்சே சந்திப்பு!

Tuesday, June, 19, 2012
லாஸ் காபோஸ்::மெக்சிகோவில் நடந்து கொண்டிருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

மெக்சிகோ நாட்டில் உள்ள லாஸ் காபோஸ் நகரில் ஜி-20 மாநாடு நேற்று துவங்கியது. அம்மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட பன்னாட்டு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

அந்த சந்திப்பின்போது இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனனும் உடனிருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கும், ராஜபக்சேவும் சந்தித்துள்ளது இது தான் முதன் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment