Wednesday, June 20, 2012இலங்கை::கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பணிகளை பூர்த்தி செய்த பின், நேற்று கியூபா, ஹவானாவில் உள்ள ஷேகுவேராவின் இல்லத்துக்கு சென்றார்.
ஜனாதிபதி, ஷேகுவேராவின் குடும்பத்தவர்களின் சுகநலன்களையும் கேட்டறிந்தார். ஷேகுவேராவின் மனைவி, மகன் உட்பட உறவினர்களின் சுகநலன்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களுடன் உரையாடினார்.
ஷேகுவேராவின் புரட்சி வாழ்வின் இன்மை நினைவுகளை ஷேகுவேராவின் மனைவி ஜனாதிபதியிடம் நினை வூட்டினார். ஷேகுவேரா பற்றி எழுதப்பட்ட இரு நூல்களையும் அவர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
ஜனாதிபதியைத் தமது கமெராவில் பதித்த ஷேகுவேராவின் மகன் அதனை நினைவுப் பரிசாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ஸ, மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் விஜயத்தில் இணைந்திருந்தனர்.
No comments:
Post a Comment