

Tuesday, June, 19, 2012இலங்கை:: வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்கள் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர்.
சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பின் கண்ணாடி உடைந்துள்ளது.
இதனையடுத்து பஸ்ஸினுள் இருந்தவர்கள் மீது ஒயில் ஊற்றப்பட்மையால் பத்துக்கும் மேற்பட்டவர்களின் உடைகள் சேதமடைந்துள்ளது.
No comments:
Post a Comment