Thursday, June, 21, 2012இலங்கை::இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகபட்டினம் - அக்கரபேட்டை மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடந்த 16ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல்சீற்றம் காரணமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
இதனையடுத்து, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் யாழ். மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 9 பேரும் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களில் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment