Thursday, June, 21, 2012இலங்கை::மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு பகுதியில் மரகதம் பாஸ்கரன் என்பவர் தனது மனைவியின் தங்கையான சண்முகம் கௌரி (வயது 15) என்ற சிறுமியை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியதால் வாழைச்சேனை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சிறுமி கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் குழந்தையொன்றைப் பிரவசித்துள்ளார். திருமணமாகாத சிறுமி குழந்தையை பிரசவித்தமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சிறுமி தனது மூத்த சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. மூத்த சகோதரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழில் வாய்ப்பொன்றின் மூலம் வெளிநாடு சென்றுள்ளார்.
இந்த நிலையில் மூத்த சகோதரியின் வீட்டில் சிறுமியின் பெற்றோர், சகோதரியின் கணவர் ஆகியோருடன் சண்முகம் கௌரியும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
மரகதம் பாஸ்கரன் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் சிறுமியை மரகதம் பாஸ்கரன் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனால் சிறுமி கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சண்முகம் கௌரியும் அவரது குழந்தையும் மட்டக்களப்பு சிநேக தீபம் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment