Thursday, June 21, 2012

உயிருடன் தனது குழந்தையைப் புதைத்ததாகக் கூறப்படும் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியல்!

Thursday, June, 21, 2012
இலங்கை::உயிருடன் தனது குழந்தையைப் புதைத்ததாகக் கூறப்படும் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நீதிமன்றத்தில் நேற்று மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று வீட்டிற்கு பின்புறமாக உயிருடன் சிசுவைப் புதைத்துள்ளார்.

எனினும் குழந்தை வைத்தியசாலையில் உயிரிழந்தமையால் குழந்தையை புதைத்ததாக அந்தத் தாய் கூறியுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணினுடைய தாயார் அந்தக் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு, அதனைக் காப்பாற்றிய சந்தேகத்திற்குரிய பெண்ணினுடைய தாயார், அதனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

No comments:

Post a Comment