Saturday, June 16, 2012

கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத நிலையம் போர்வையில் விபச்சார விடுதி! 5 பெண்களும் ஆணும் கைது!

Saturday, June, 16, 2012
இலங்கை::கல்கிஸ்ஸை அபொன்சு மாவத்தை தெஹிவளை இலக்கம் 2 என்ற முகவரியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்டு வந்த இந்த விபச்சார விடுதி நேற்று (15) மாலை கல்கிஸ்ஸை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த விபச்சார விடுதியில் இருந்து ஒரு சந்தேகநபரும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்..

No comments:

Post a Comment