Saturday, June, 16, 2012இலங்கை:: காவல்துறை அறிக்கையினை பெறுவதற்கு பொது மக்கள், காவல்துறை தலைமையகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுமக்களுக்கு தேவையான அறிக்கையினை, கொழும்பு 11 ஓல்கொட் மாவத்தையின் 331 இலக்கத்தில் உள்ள காவல்துறை கட்டத்தில் இருந்து பெற முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகள் தமது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு என்பனவற்றின் பிரதியுடன், 500 ரூபா கொடுப்பனவினையும் சமர்ப்பிப்பதன் மூலம் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் காலை 8.30 முதல் மாலை 4 மணிவரையில் பொதுமக்கள் தமது கருமங்களை மேற்கொள்ள முடியும் எனவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் 011 – 2422 994 என்ற தொலை பேசி இலங்கத்துடன் தொடர்பு கொண்டு பெறமுடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
No comments:
Post a Comment