Saturday, June, 16, 2012இலங்கை::புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் நிதி வலையமைப்பு குறித்து தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பாரியளவிலான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய டி.விடிக்களை நெதர்லாந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரையில் இன்டர்போல் பொலிஸாரினால் கூட கண்டறியப்படாத தகவல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரகசிய தகவல்களை வைத்திருந்த புலிகளின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் புலிகள் ஐரோப்பாவில் தங்க வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பத்து ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் பற்றிய தகவல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment