Tuesday, June 12, 2012

தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்காக 4விசேட மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை!

Tuesday, June, 12, 2012
இலங்கை::சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்காக 4 விசேட மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதியமைச்சின் தலையீட்டில், மன்னார், வவுனியா, அனுராதபுரம், வெளிகடை ஆகிய சிறைச்சாலைகளில் இந்த நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் 629 புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் தொடர்பிலான வழக்குகளை விசாரித்த பின்னர், குற்றவாளிகளாக இனங்காணப்படுவர்களுக்கு தண்டனை வழங்கப்பட உள்ளதுடன் விடுதலை செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படுவர்.

இந்த 4 மேல் நீதிமன்றங்களில் வவுனியா மற்றும் மன்னார் சிறைச்சாலைகளில் ஏற்படுத்தப்பட உள்ள மேல் நீதிமன்றங்கள் இந்த மாதம் 26 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதுடன், வெலிகடை சிறைச்சாலையில் திறக்கப்பட உள்ள நீதிமன்றத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் நேற்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment