Saturday, June 23, 2012அண்ணா நகர்::இலங்கைத் தமிழன் ஆனாலும், இங்குள்ள தமிழன் ஆனாலும் சரி. தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான்; தாழ்ந்து போகவும் மாட்டான்' என,(23ம்.புலிகேசி). தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னையில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். வட சென்னை, தி.மு.க., சார்பில், ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியைக் கண்டித்து, புரசைவாக்கம் தானா தெருவில், நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன், முதன்மை செயலர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலர் துரைமுருகன், ராஜ்ய சபா எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்தையும், தமிழக மக்களையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும், கலையையும், இலக்கியத்தையும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும், அண்ணாவால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அழிந்துவிடாமலும், அண்ணா, பெரியார் கொள்கைகள் அழிந்துவிடாலும் காப்பாற்ற, நிறைய பணி செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு, இந்த ஆட்சி இடையூறாக இருக்கிறது. அதை கண்டித்து, ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம். தி.மு.க.,வினர் காந்தியை பின்பற்றுபவர்கள், வன்முறையை தவிர்ப்பவர்கள். வன்முறை வந்தால் ஏற்க மாட்டோம். எனவே இந்த போராட்டத்தில், தப்பிப்பதற்காக வன்முறையில் யாராவது ஈடுபட்டால், சிறையில் ஒப்படைப்போம். இலங்கைத் தமிழர்களுக்காக, இரண்டு முறை மத்திய அரசு, தி.மு.க., ஆட்சியை கலைத்தது. அதில், ஒன்று, அமைதிப்படை சென்னைக்கு வரும்போது, அது அமளிபடை என கூறி வரவேற்க போனதால், தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டது.
வீழ்ந்த தமிழர்கள் கண்ணீர் விடாமல் இருப்பதற்காக, 1990ம் ஆண்டு நானும், நெடுமாறனும், வைகோவும், வீரமணியும் சேர்ந்து, "டெசோ'வை உருவாக்கினோம். அதை மீண்டும் உருவாக்கியுள்ளோம். அதற்கான மாநாடு ஆகஸ்ட் 5ல் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. அதில், வெளிநாட்டு அறிஞர்கள், அரசியல்வாதிகள், தமிழக அறிஞர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் பங்கேற்கின்றனர். இலங்கைத் தமிழன் ஆனாலும் சரி, இங்குள்ள தமிழன் ஆனாலும் சரி. தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான்; தாழ்ந்து போகவும் மாட்டான். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment