Saturday, June 23, 2012இலங்கை::அளுத்கமயில் இடம்பெற்ற நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்காபரண மற்றும் மாணிக்கக்கல் கொள்ளை சம்பவத்தின் சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை கிரிதலே பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேகநபரைக் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கியொன்றும் 5 தோட்டாக்களுடன் ரிவால்வர் ஒன்றும் 109 மாணிக்கக்கற்கள் மற்றும் ஒருதொகை தங்காபரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பெந்தோட்டை பகுதியில் 16 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைக் கொள்ளை உள்ளிட்ட 14 வகையான குற்றச் செயல்களுடன் இந்த சந்தேகநபர் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்...
No comments:
Post a Comment