Monday, June, 04, 2012நைஜீரியா நாட்டில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 153 பேர் பலி ஆனார்கள்.
விமானம் விழுந்து நொறுங்கியது
நைஜீரியா நாட்டின் வர்த்தக நகரமான லகோசில் இருந்து தலைநகர் அபுஜாவுக்கு நேற்று ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. `டானா ஏர்' என்ற விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் சிப்பந்திகள் உள்பட 153 பயணிகள் இருந்தனர்.
லாகோஸ் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளானது. குடியிருப்பு உள்ள ஒரு கட்டிடத்தின் மீது திடீரென்று விழுந்து நொறுங்கியது. கட்டிடத்தின் மீது விழுந்ததும் விமானம் தீப்பிடித்துக் கொண்டது. பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இந்த விபத்து நடந்தது.
153 பேர் பலி
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 153 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் உயிர் தப்பி இருக்க வாய்ப்பு இல்லை என்று விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment