Saturday, June 30, 2012இலங்கை::அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையைச் சேர்ந்த 130 பேர் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்த நாட்டிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுசன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் திசாநயக்க கூறினார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய மூன்று படகுகள் நேற்று முனதினம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவினை அண்மித்த கடற்பரப்பில் அந்த நாட்டின் கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை இரவிலும் இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 93 பேர் அடங்கிய படகொன்றை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த ஒருவார காலத்திற்குள் கிறிஸ்மஸ் தீவினை அண்மித்த கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதுடன் அவற்றிலிருந்த பெரும் எண்ணிக்கையானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment